தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!
சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியாக தினமும் ஒருவர் மதுபானம் அருந்தும் அளவைப் பொறுத்து அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது உண்மை.
குடிப்பதால் பெரிய ஊறு ஏற்படும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பெக்குக்கு 10 முதல் 20 சதவீத அபாயம் அதிகரிக்கும். ஆனால் தினமும் 2 பெக் அளவுக்கு குடித்துவந்தால் அதுதான் உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
இதுபற்றி ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் வெரிட்டி ஃபிர்த் கூறுகையில், அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் மிதமான குடிப்பழக்கம்கூட ஆபத்தை உண்டாக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications