அமர்நாத் ஹெலிகாப்டர் யாத்திரைக்கு இன்டர்நெட்டில் புக்கிங் வசதி

இமயமலைச்சாரலில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்ல ஆண்டுதோறும் 2 மாதங்கள் அனுமதி வழங்கப்படும்.
இந்தாண்டு ஜூன் மாதம் 18ம் தேதி தொடங்கி ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 18ம் தேதி வரை இந்த புனித யாத்திரை நடைபெறுகிறது. காஷ்மீர் மாநிலம் பால்தல் என்ற இடத்தில் இருந்து அமர்நாத்துக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கு இன்டர்நெட்டில் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ அமர்நாத்ஜி கோயில் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி அருண்குமார் கூறியதாவது:
அமர்நாத்துக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கான முன்பதிவு வசதியில் 50 சதவீத ஒதுக்கீட்டை இன்டர்நெட் மூலம் யாத்திரிகர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது.
பால்தல் பகுதியில் பயணிகள் தங்குமிடங்களுக்கு இந்திய டிராவல் ஏஜெண்ட்கள் சங்க காஷ்மீர் மாநில கிளை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புனித யாத்திரையை பக்தர்கள் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், இதன்மூலம் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்துவதற்கும் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று கருதுகிறோம்.
சமீபகாலமாகவே அமர்நாத் புனித யாத்திரை வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதற்குக் காரணமே உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புதான். இந்த புனித பயணத்தால் காஷ்மீர் பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியைப் பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி காஷ்மீர் மாநில சுற்றுலா ஏஜெண்ட் சங்கத் தலைவர் நசீர் ஷா கூறுகையில், அமர்நாத் செல்வதற்கு கூடுதல் ஹெலிகாப்டர் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் காஷ்மீர் சுற்றுலா நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications