புதுவையில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவையில் வெடி குண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்டார். இதில் அவருடன் இருந்தவர்களும் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி உழவர்கரையைச் சேர்ந்த ரவுடி டெஸ்தான். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் டெஸ்தான் வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த சில மர்மஆசாமிகள் அவரது வீட்டுக்குள் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் டெஸ்தான் சம்பவ இடத்திலேயே பலியானார். வீட்டில் இருந்தவர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டெஸ்தானுக்கு பலருடன் முன்விரோதம் இருந்துள்ளதாக தெரிகிறது. குண்டு வீசிச் சென்றவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications