திமுக மகளிர் மாநாடு மீண்டும் மாற்றம்-ஜூன் 14,15ல் நடக்கும்
சென்னை: திமுக மகளிர் அணி மாநாடு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 14, 15 தேதிகளில் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
திமுக மகளிர் அணியின் முதல் மாநாடு மே 24, 25ம் தேதிகளில் கடலூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வந்தது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாநாட்டுக்கு வருவோர் சிரமப்படுவார்கள் என்று மாநாடு ஜூலை 12, 13 தேதிகளில் நடக்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்சி அறிவித்தது.
தற்போது மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தாண்டு சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14, 15ம் தேதிகளில் கடலூரில் மாநாடு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மாநாட்டு வேலைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மாநாட்டின் முதல் நாள் மகளிர் அணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடக்கிறது. இதில் மகளிர் அணியினர் சீருடை அணிந்து பங்கேற்கின்றனர். முதல்வர் கருணாநிதி உள்பட கட்சியின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிடுகின்றனர்.
மாநாடு தேதி அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால் மாநாட்டுக்கு வருவோருக்கு தங்கும் இடவசதி செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி, பண்ரூட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களையும் லாட்ஜ்களையும் திமுகவினர் முன்கூட்டியே புக் செய்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications