கொழும்பு தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி- காயம் 90

கொழும்புவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதயா நானயாகரா கூறுகையில், போலீஸார் பஸ் மீது விடுதலைப்புலிகள் நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டவரோடு சேர்த்து 8 போலீஸ்காரர்களும் பலியாயினர். இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து போலீஸ்காரர்களை ஏற்றிவந்த பஸ் மீது மோதி வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
கொழும்பு கமர்ஷியல் தெருவில் உள்ள புத்தர் கோயில் முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் சீல் வைத்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஹில்டன் மற்றும் ஏற்கெனவே விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு ஆளான உலக வர்த்தக மைய அலுவலக காம்ப்ளக்ஸ் ஆகிய முக்கிய கட்டடங்கள் இந்த பகுதியில்தான் அமைந்திருக்கின்றன என்பதால் இந்த சம்பவம் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்தில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் சிங்கள ராணுவத்தினர் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் பழிதீர்க்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என்று ராணுவத்தினர் கருதுகின்றனர்.
இதுதவிர சில நாட்களுக்கு முன்பு இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறுகையில், புலிகளுடன் மீண்டும் போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது துடிப்பான பாதுகாப்பு படையினரின் கையளவு தூரத்தில் வெற்றிக்கனி இருக்கிறது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று குறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications