தந்தையை கொன்று நாடகமாடிய மகன் கைது
நெல்லை: குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை முன்னீர்பள்ளம் அருகேயுள்ள மேலசெவலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரவணன், விவசாயி. திருமணமாகி குழந்தைகள் உள்ளபோதும் சரவணன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இதனால் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை கிருஷ்ணன் பராமரித்து வந்தார். இந்நிலையில் மேலச்செவல் அருகேயுள்ள தோட்டத்தில் கிருஷ்ணன், ஆடுகளுக்கு இலை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சரவணன், கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சரவணன் சரமாரியாக கத்தியால் குத்தியதால் கிருஷ்ணன் அதே இடத்தில் பலியானார். பயந்துபோன சரவணன் கொலையை மறைப்பதற்காக தனது தந்தை கிருஷ்ணன், மரத்தில் ஏறி ஆடுகளுக்கு இலை பறித்தபோது கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக அனைவரிடமும் கூறினார்.
சந்தேகத்தின்பேரில் அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சரவணன் கைது செய்யப்பட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications