சூறைக் காற்றில் ரயில் நிலைய ஷெல்டர் நாசம்
மதுரை: மதுரையில் திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையினால் ரயில்வே நிலையத்தின் 4வது பிளாட்பார மேற்கூரை சின்னாபின்னமானது.
மதுரை ரயில்நிலையம், விமானநிலையம், எஸ்எஸ்காலனி, கூடல்நகர், ஆனையூர் மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த சூறைக்காற்றும் வீசியது.
மதுரை ரயில்நிலைத்தில் பயணிகள் வசதிக்காக 4வது மற்றும் 5வது நடைமேடைக்கு மத்தியில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையும் இந்த சூறைக்காற்றில் சிக்கி சின்னாபின்னமானது.
300 அடி நீளமுள்ள இந்த நடைமேடை மேற்கூரை பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் எதுவும் வராத நேரம் என்பதால் பயணிகள் யாரும் அங்கு இல்லை.
இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வலுவானதாக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை காற்றுக்கு சரிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications