சென்னை அருகே புதிய 1000 மெகாவாட் அனல் மின்நிலையம்
சென்னை: சென்னை அருகே குருவிமேடு கிராமத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்த புதிய அனல் மின்நிலையத்தை தமிழ்நாடு மின்வாரியமும் என்டிபிசி நிறுவனமும் சரி பங்கு மூலதனத்தில் கூட்டாக அமைக்க உள்ளன. இந்த மின் நிலையத்துக்காக ஊரக மின் இணைப்பு கழகம் (ஆர்இசி) ரூ.3,796 கோடி கடன் வழங்க முன்வந்துள்ளது.
11வது ஐந்தாண்டு திட்டக்காலத்துக்குள் இங்கு முழுமையாக உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் உற்பத்தி யூனிட் வரும் 2020-11ம் ஆண்டு செயல்படத் தொடங்கும். இந்த நிறுவனத்துக்குத் தேவையான மின் உற்பத்திக் கருவிகளை பெல் நிறுவனம் வழங்குகிறது.
இந்நிலையில் ஊரக மின் இணைப்புக் கழகம் தமிழ்நாடு மின் வாரியத்துடன் மற்றொரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. அதன்படி 3000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்றவர்றுக்காக ரூ.16,000 கோடி கடன் வழங்கியுள்ளது.
தமிழக மின்வாரிய மேம்பாட்டுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஊரக மின் இணைப்புக்கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications