கர்நாடகம்-தேர்தல் முடிந்தது: 25ல் வாக்கு எண்ணிக்கை
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபைக்கு 3வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது.
இதில் சுமார் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வட கர்நாடகத்தில் உள்ள பெல்காம், தார்வாட், ஹவேரி, பீதர், குல்பர்கா, பீஜப்பூர், பாகல்கோட், காடக் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மொத்தம் 69 சீட்கள் உள்ளன. மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் முன்னாள் முதல்வர் தரம்சிங், மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சட்ட மேலவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே.பாட்டீல், முன்னாள் அமைச்சர்கள் நாகமரப்பள்ளி, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், உதாசி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளிலும் பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மொத்தமுள்ள 224 இடங்களில் அந்தக் கட்சிக்கு 120 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு வெறும் 50 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 45 இடங்கள் வரையிலும் கிடைக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
வரும் 25ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications