மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு-நாளை அறிவிப்பு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்த வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறையை, இந்த நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து பெட்ரோலிய விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை பிரதமர் தலைமையில் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் 5 வரை உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து மறுக்கவும் இல்லை, அதேசமயம், உறுதிப்படுத்திக் கூறவும் இல்லை.
முரளி தியோரா கூறுகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைக் காக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்களைக் காக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். பொதுத்துறை நிறுவனங்களின் நிலை குறித்து அரசு பெரும் கவலையுடன் உள்ளது. இருப்பினும் இதனால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றார்.
தற்போது இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்கள் விற்பனை மூலம் ரூ. 450 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோலால் லிட்டருக்கு ரூ. 16.34ம், டீசலுக்கு ரூ. 23.49ம், காஸ் சிலிண்டருக்கு ரூ. 305.90ம், மண்ணெண்ணையால் லிட்டருக்கு ரூ. 28.72ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
நாளை காலை பெட்ரோலிய நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் முரளி தியோரா. அதன் பின்னர் மத்திய அமைச்சரவை கூடி விவாதிக்கவுள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications