பரம்பிக்குளம் ஒப்பந்தம்: மே 30ல் தமிழகம் - கேரளா பேச்சு
திருவனந்தபுரம்: பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஒப்பந்தம் குறித்து வருகிற 30ம் தேதி தமிழக, கேரள மாநில தலைமைச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தின் கீழ் வரும் சோலையாறு வடிநிலம் தொடர்பான பிரச்சினை குறித்து இரு மாநில தலைமைச் செயலாளர்களும் வருகிற 30ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பரம்பிக்குளம் திட்ட ஒப்பந்தத்தின் கீழ் சாலக்குடி ஆற்றுப் படுகையில் 7.25 டி.எம்.சி நீரும், சோலையாறு படுகையில், 12.3 டி.எம்.சி நீரும் தமிழகம், கேரளத்திற்குத் தர வேண்டும்.
ஆனால் ஒப்பந்தப்படி கேரளா உரிய நீரை கடந்த பல ஆண்டுளாகவே பெறவில்லை.
பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்ய நீர்ப்பாசனத்துறை மற்றும் மின்துறை மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை முதல்வர் அச்சுதானந்தனிடம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் கேரள தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அவர்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications