மாம்பழம் வாங்கியதில் சர்ச்சை - துணை தாசில்தாருக்கு அடி, உதை
நாகப்பட்டனம்: நாகையில் மாம்பழம் வாங்கிய பிரச்சனையில் துணை தாசில்தாரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் அப்துல் முத்தலீப் (53).
இவர் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் நாகூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒரு தள்ளு வண்டியில் விற்கப்பட்டு வந்த மாம்பழங்களை வாங்கியுள்ளார்.
மாம்பழம் வாங்கிய பின்னர், விலையை குறைத்துக் கூறுமாறு பேரம் பேசியுள்ளார். அப்போது வண்டி அருகில் இருந்த இருவர் அப்துல் முத்தலீபிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் உச்ச கட்டத்தை அடைந்த போது அந்த இருவரும் அப்துல் முத்தலீப்பை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை நாகை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முத்தலீப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, துணை தாசில்தாரைத் தாக்கிய செல்வம், கண்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications