சென்னையில் தொடரும் பகலில் வெயில் - மாலையில் மழை
சென்னை: சென்னையில் நேற்றும் பகலில் கடும் வெயில், மாலையில் பலத்த காற்றுடன் மழை காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அடித்து வரும் கடும் வெயில் வேகம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நல்ல மழையும் பெய்து மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்து வருகிறது.
தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில், மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை என்ற வினோத நிலை காணப்படுகிறது.
பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்து விட்டு, மாலையில் அப்படிேய நிலைமை மாறி விடுகிறது. பலத்த சூறைக் காற்றுடன், கன மழை பெய்கிறது. இருப்பினும் மழை நகர் முழுவதும் இருப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்ற ரேஞ்சில் மழை பெய்து வருகிறது. அதேசமயம் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதால் இரவில் புழுக்கம் குறைந்து வெட்கை தணிந்து விடுகிறது.
சென்னையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரியாகவும், மீனம்பாக்கத்தில் 104 டிகிரியாகவும் வெயில் அடித்தது. இன்றும் பகலில் நல்ல வெயில், மாலையில் காற்றுடன் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடியப் போவதால் இனிமேல் வெயிலின் தாக்கமும் படிப்படியாக குறையும், மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications