மனைவியே கண்கண்ட தெய்வம்- விஜய்காந்த்
சென்னை: திருமணமான ஆண்களுக்கு மனைவியே கண்கண்ட தெய்வம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
தே.மு.தி.க. பிரமுகர் இல்லத் திருமணத்தை தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து நடத்தி வைத்து விஜய்காந்த் பேசுகையில்,
தே.மு.தி.கவினர் மதங்களை கடந்து மனதால் ஒன்றுபட்டு செயல்படுவதை இந்த திருமண நிகழ்ச்சியில் காணமுடிகிறது. ஆனால் சில அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக மதங்களை பிரித்து மக்களுக்குள் சண்டையை மூட்டுகிறார்கள்.
திருமண விழாவில் அரசியல் பேசுவதை தவிர்க்கவே விரும்புகிறேன். மணமக்கள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமையாக நலமாக வாழலாம்.
எனது வளர்ச்சி பிடிக்காமல் எனக்கு ஆளுங்கட்சியினர் நிறைய தொல்லை கொடுத்து நிம்மதியை கெடுத்தார்கள். அப்போதெல்லாம் எனது மனைவியின் ஆறுதல் வார்த்தைகளாலும், அன்பான அணுகுமுறையாலும் என்னால் அரசியலில் தெளிவோடு செயல்பட முடிந்தது.
நான் கலை உலக வாழ்க்கையில் இருந்து அரசியல் உலக வாழ்க்கைக்கு வரும்போது எனது மனைவியின் அன்பான ஆதரவு, ஊக்கம் எனக்கு கைகொடுத்தது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறார் என்பார்கள். அது வேறு யாரும் இல்லை மனைவிதான். என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார்.
கணவரே கண்கண்ட தெய்வம் என்பார்கள். திருமணமான ஆண்களுக்கு மனைவியே கண்கண்ட தெய்வம். எனவே மண மக்களாகிய நீங்கள் விட்டுக் கொடுத்து ஒத்துப் போனால் வாழ்க்கை பயணம் சுகமானதாக அமையும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications