மழையால் ஷாரூக் அணியின் செமிஸ் கனவு 'புஸ்'

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 47வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு கொல்கத்தா அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில் நடப்பதாக இருந்தது.
இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் டெல்லியைப் பொறுத்தமட்டிலும் இது வாழ்வா சாவா என்று நிலை இருந்தது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை சேவாக்கின் டெல்லி அணி தக்க வைக்க முடியும்.
ஏற்கெனவே ஆடிய 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வி என்ற கணக்கில் 12 புள்ளிகளை டெல்லி அணி பெற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி விளையாடிய 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வி என்ற கணக்கில் 10 புள்ளிகளை எடுத்திருந்தது.இரண்டு அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் மிச்சமிருந்தன.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே மைதானத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. 8 மணிக்கு தொடங்கவேண்டிய ஆட்டம் இதனால் தடைப்பட்டது. இரவு 10 மணிவரை தொடர்ந்து மழை பெய்ததால் மைதானத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. அதை உலர்த்தும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மைதானத்தை ஆய்வு செய்த அம்பயர்கள், போட்டி நடத்துவதற்கு மைதானம் ஏற்றதாக இல்லையென்று முடிவு எடுத்ததால் ஆட்டம் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது. இதையடுத்து 13 புள்ளிகள் எடுத்துள்ள டெல்லி அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. கொல்கத்தா அணி 11 புள்ளிகள் மட்டுமே எடுத்திருப்பதால் அரையிறுதிக்கு தேர்வு பெறும் தகுதியை இழந்தது.
தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை உற்சாகப்படுத்தும்விதமாகவும் அதே நேரத்தில் கண்டிக்கும் விதத்திலும் அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக் நேற்று ஒரு எஸ்எம்எஸ் அறிவுரை அனுப்பியிருந்தார். அதில் அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று தமது திறமையை வீரர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று ஷாரூக் கூறியிருந்தார். ஆனால் வீரர்கள் மீது வருண பகவானுக்கு இரக்கம் இல்லை போலிருக்கிறது. திறமையை நிலைநாட்டும் வாய்ப்பு கிடைக்காமலேயே அரையிறுதி வாய்ப்பு கைவிட்ட சோகத்தில் கொல்கத்தா கேப்டன் கங்குலியும் சகவீரர்களும் ஆழ்ந்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. 3வது மற்றும் 4வது இடத்துக்காக டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் போராடி வருகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications