வாக்கு எண்ணிக்கை-காஞ்சியில் கௌடா சுவாமி தரிசனம்!
காஞ்சி: கர்நாடகா, தமிழக விஷச் சாராய பலிகளுக்கு கர்நாடக ஆளுநர் தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கௌடா கூறினார்.
நாளை மறுதினம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில் இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு கௌடா வந்தார். அங்கு தரிசனம் செய்த பி்ன் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் அஹோபில ஜீயர் மடத்துக்கும் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் 191 உயிர்களை பலிவாங்கிய விஷச் சாராய சம்பவத்துக்கு தமிழகத்தை குறை சொல்ல முடியாது. இந்த சம்பவத்துக்குத் தற்போது கர்நாடக நிர்வாகத்தை கவனித்துவரும் ஆளுநர் தார்மீக பொறுப்பெற்க வேண்டும்.
எனது மகன் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சி நடத்தியபோது கர்நாடகத்தில் சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டன. அப்போது ஒருமுறை கூட கள்ளச் சாராய சாவு ஏற்பட்டதில்லை.
எனவே இந்த துயரச் சம்பவத்துக்கு தற்போதைய நிர்வாகம் தான் காரணம். புதிய அரசு பொறுப்பேற்கும்வரை ஆளுநர் காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும்.
அதிகாரிகள் செய்த தவறினால்தான் இந்த சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார்.
கர்நாடக தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு கௌடா பதிலளிக்க மறுத்துவி்ட்டார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications