மணல் ஏலம் விவகாரம்: 26ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை: மணல் குவாரிகளை தனியார்களுக்கு ஏலம் மற்றும் டெண்டர் மூலம் ஒப்படைக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது. வருகிற 26ம் தேதி இக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே கையகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மணல் குவாரிகளை ஏலம் விடவும், டெண்டர் விடவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் அளித்துள்ளது. ஜூலை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதை விட முக்கியமாக திமுக கூட்டணிக் கட்சிகளான பாமகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுதொடர்பாக விடுத்த அறிக்கைக்கு விளக்கம் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் சட்டசபைத் தலைவர்கள் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆற்று மணல் எடுத்து விற்பனை செய்தல் தொடர்பாக அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை பற்றி கலந்து ஆலோசிப்பதற்காக தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் வரும் 26ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம், அமைச்சரவை அரங்கில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பிதழ் சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications