கள்ளக் காதலனுடன் ஓடிய பெண் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்வு பெற்ற பெண், கணவரை கைவிட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் தலைமறைவானார்.

கரூர் மாவட்டம், தோகமலை அருகே வெள்ளைப்பாறை பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி தெய்வமணி (30). இருவருக்கும் திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது. போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் வெற்றிபெற்றுள்ள தெய்வமணி விரைவில் பணியில் சேர இருந்தார்.

இந் நிலையில் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவருடன் தெய்வமணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தெய்வமணியை காணவில்லை.

இதுபற்றி தோகமலை போலீசில் தெய்வமணியின் கணவர் பாலசுப்பிரமணியம் செய்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதையடுத்து கள்ளக்காதலன் கனகராஜ் உடன் தெய்வமணி தலைமறைவான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. காதல் ஜோடிக்கு போலீசார் வலைவிரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+