லெபனான் அரசியல் உடன்பாடு: ரஷ்யா வரவேற்பு
மாஸ்கோ: லெபனான் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.
லெபனான் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளிடையே நேற்று கத்தார் தலைநகர் டோஹாவில் உடன்பாடு கையெழுத்தானது.
இதை ரஷ்யா வரவேற்றுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் போரிஸ் மலகோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தங்களை ரஷ்யா வரவேற்கிறது. உள்நாட்டு அரசியல் குழப்பத்திற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என ரஷ்யா நம்புகிறது.
அப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்பட இந்த ஒப்பந்தங்கள் வழி வகுக்கும்.
தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை களைந்து, லெபனான் அரசியல் தலைவர்கள் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. சுதந்திர, ஒருங்கிணைந்து லெபனானுக்கு இது முக்கியமானது.
லெபனானின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு வித்திடும் இந்த ஒப்பந்தங்கள் ஏற்பட லெபனான் தலைவர்களும், அரபு லீக் தலைவர்களும், கத்தார் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யா வரவேற்று பாராட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
லெபனான் தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி, புதிதாக உருவாக்கப்படவுள்ள தேசிய ஐக்கிய அரசில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications