கார்த்திக் புதுக் கட்சி?- முக்கிய ஆலோசனை
சென்னை: பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள நடிகர் கார்த்திக் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று அவர் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தார் கார்த்திக். கட்சியை வளர்க்க சரிவர செயல்படுவதில்லை, நிர்வாகிகளை மதிப்பதில்லை தொண்டர்களை சந்திப்பதில்லை என்று அடுக்கடுக்காக கார்த்திக் மீது எதிர் கோஷ்டியினர் மேலிடத்திற்குப் புகார்களை அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து கார்த்திக் விரைவில் புதுக் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கார்த்திக் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் தனது ரசிகர் மன்ற மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
கூட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித் தனியாக கருத்து கேட்கிறார் கார்த்திக். அதன் பின்னர் புதிய கட்சி தொடங்குவது குறித்த முடிவை அவர் எடுத்து அறிவிப்பார். இன்று மாலைக்குள் புதுக் கட்சி தொடர்பான அறிவிப்பை கார்த்திக் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலை 'லேப்டாபில்' கவனிக்கிறேன்:
இந் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
ஆரம்பத்திலிருந்தே எனக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். இப்போது அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது.
நான் அரசியலை விட்டு ஓடி விடுவேன் என அவர்கள் நினைக்கிறார்கள். அதுதான் நடக்காது. நான் எங்கும் போக மாட்டேன். தொடர்ந்து அரசியலில் இருப்பேன். மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டியுள்ளது.
மக்கள் என் மீது பாசம் வைத்துள்ளனர். அவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். விரைவில் புதுக் கட்சி தொடங்குவேன். அந்தக் கட்சியை தனித்து நடத்துவது சுலபமல்ல. எனவே திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பேன். எம்.பி. தேர்தலில் ஒரு சீட் கேட்பேன்.
அரசியலை விட்டு நான் ஒதுங்கியிருக்கவில்லை. லேப்டாப்பில் உலக அரசியலை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் பார்வையிலிருந்து எதுவுமே தப்பாது என்று 'ஏதேதோ' கூறியுள்ளார் கார்த்திக்.
'லெட்டர் பேட்' அரசியல் கட்சிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், கார்த்திக் லேட்டஸ்டாக 'லேப்டாப்' அரசியலை அறிமுகப்படுத்தியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications