வளர்ச்சி..வளர்ச்சி..வளர்ச்சி தான் அஜென்டா-எதியூரப்பா
பெங்களூர்: கர்நாடகத்தின் நில வளம், நீர் வளத்தைக் காக்க பாடுபடுவோம் என பாஜக சார்பில் முதல்வராகவுள்ள அக் கட்சியின் மாநிலத் தலைவர் எதியூரப்பா கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தென்னகத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் எங்களது தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கனவு நினைவாகியுள்ளது.
கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு தீவிரமாக பாடுபடும். மாநிலத்தின் பிற்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.
கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெறவும், கர்நாடகத்தின் நீர் வளம், நில வளத்தைக் காக்கவும் தீவிரமாக பாடுபடுவோம்.
அரசின் அஜென்டாவே வளர்ச்சி.. வளர்ச்சி.. வளர்ச்சி என்பதாகவே இருக்கும். பெங்களூரை உலகிலேயே மிகச் சிறந்த நகரமாக மாற்ற பாடுபடுவோம்.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் துரோகம், முதுகில் குத்தியது என்பது குறித்தெல்லாம் பேச நான் தயாராக இல்லை. தேர்தல் முடிந்துவிட்டது, ரிசல்ட் வந்துவிட்டது. மக்கள் எங்களுக்கு ஆட்சி நடத்த உத்தரவிட்டுள்ளனர், அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மேலும் இந்தத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள், தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!












Click it and Unblock the Notifications