அடுத்த வாரத்தில் புதிய கட்சி-கார்த்திக்
சென்னை: புதிய கட்சி பற்றிய அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவேன் என நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து கல்தா தரப்பட்ட கார்த்திக், கட்சியில் தனக்கு ஆதரவாக உள்ள மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் தனது ஆதரவாளர்கள், ரசிகர்கள், தொண்டர்களுடன் கார்த்திக் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் கார்த்திக் நிருபர்களிடம் பேசுகையில்,
கறந்த பால் போல் சுத்தமாக இருந்த பார்வர்டு பிளாக் இயக்கத்தில் சில விஷமிகள் விஷத்தை கலந்து விட்டனர். இந்த விஷத்தை மக்களுக்கு கொடுக்காமல் தடுப்பதுதான் எங்களுடைய தலையாய கடமை. பார்வர்டு பிளாக் கட்சி எப்படி இயங்குகிறது என்பதை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று முடிவெடுக்கும் துணிவு கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் பிஸ்வாசுக்கு எப்படி வந்தது?.
நான் தலைவராக இருந்தவரை எந்த ஒரு விஷயம் என்றாலும் அவருடன் கலந்துவிட்டுத்தான் செய்வேன். தன்னிச்சையாக செயல்பட்டேன் என்பது முற்றிலும் தவறானது. கடந்த நவம்பர் மாதம் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் கட்சியின் அடையாள அட்டையில் எனது கையெழுத்து இருக்க கூடாது என்ற பிரச்சினையில் பிஸ்வாசுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை நான் பெரிய விஷயமாக எடுக்கவில்லை.
வட மாநிலங்களில் கட்சியின் எந்த விழாவானாலும், லெட்டர் பேடிலும் நேதாஜி படம் மட்டுமே இருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை முன்னோடியாக வைத்து கட்சி நடத்துபவர்கள் அவருடைய படத்தை வைக்கவில்லை. ஆனால் அவர்கள் இங்கே வந்தால் மட்டும் தேவர் தேவைப்படுகிறார். தேவர் பெயரை சொல்லி ஏமாற்று வேலை நடக்கிறது. தமிழகத்தில் 9 இடங்களில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இன்று வரை கட்சியின் மத்திய குழுவில் இருந்து எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை.
என்னால் கட்சி வளர்ந்திருக்கிறது!!!:
இப்போது பார்வர்டு பிளாக் கட்சியில் சிங்க சின்னமும், புலிக்கொடியும் மட்டும்தான் இருக்கிறது. மக்கள் மீது எந்த பற்றும் கிடையாது. நான் கட்சித் தலைவராக வந்த பிறகு 11 மாவட்டங்களில் பார்வர்டு பிளாக் கட்சி வளர்ந்திருக்கிறது. வரும் தேர்தலில் வெற்றி அடைய வேண்டும் என்ற பேராசையில் வளரும் ஒரு இயக்கத்தை கொன்றாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறிகிறேன் என்று பிஸ்வாஸ் கூறிய வார்த்தை ஈட்டியை வைத்து குத்துவது போல் இருந்தது. மைக்கும், மக்களும் ஒருவருக்கு மட்டும் சொந்தமில்லை என்பது அவருக்கு புரியாது. தகுதியில்லாதவர்கள் பேச்சை கேட்டு, கட்சியில் இருந்து என்னை தூக்கி எறிந்து விடலாம். ஆனால் மக்கள் மனதில் இருந்து தூக்கி எறியமுடியாது. பிஸ்வாஸ் இருக்கும் வரை பார்வர்டு பிளாக் கட்சி எங்கும் வளரமுடியாது.
புதிய கட்சி தொடங்குங்கள் என்று ஏராளமானோர் என்னிடம் சொல்கிறார்கள். இப்போதுள்ள சூழலில் கோபத்திலோ, உணர்ச்சிவசப்பட்டோ எந்த முடிவும் எடுக்க மாட்டேன். எதை மக்கள் விரும்புகிறார்களோ, அதை தீர்க்கமாக யோசித்து ஒரு வாரத்தில் கட்சியை அறிவிப்பேன். ஒரு பெரிய மாநாடாக நடத்தி எனது அறிவிப்பை வெளியிடுவேன். எந்த அமைப்பை தொடங்கினாலும், அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்த அமைப்பாக அது இருக்கும்.
மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்துடன்தான் அது இருக்கும். கட்சியின் பெயர், கொடி, சின்னம் பற்றி ஆலோசித்து வருகிறோம். மக்கள் எதிர்பார்ப்பதை போலவே அது அமையும். கட்சி தொடங்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
சரத்குமார் என்னுடைய நீண்டகால நண்பர். கோவையில் அவரை சந்தித்து பேசியது உண்மைதான். அவரிடம் அரசியல் உள்பட பல பொதுவான விஷயங்களை பேசினேன். அந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என்றார் கார்த்திக்.
-
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications