பஹ்ரைன் போலீஸ் அராஜகம்-இந்திய பெண் கைது-கணவர் பரிதவிப்பு!
துபாய்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்தியப் பெண் ஒருவரை பஹ்ரைன் போலீஸார் கைது செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
பஹ்ரைனில் உள்ள இரு ஹோட்டல்களில் அந்நாட்டு போலீஸார் நேற்று விபச்சார வேட்டையை நடத்தினர். அப்போது 66 பெண்களை விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்தனர்.
இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அடங்குவார். ஆனால் இவர் தனது கணவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தவர் ஆவார். ஹோட்டலின் ரெஸ்டாரென்ட்டில் அமர்ந்து கணவருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த போலீஸார், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் திகைத்து நின்றார். ஹோட்டல் ஊழியர்களும் போலீஸாரிடம் சென்று, அப்பெண் அப்பாவி, அவரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினர். ஆனால் போலீஸார் அதைப் பொருட்படுத்தாமல் அப்பெண்ணை அங்கிருந்து இழுத்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அந்த ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், இது மிகவும் மோசமான சம்பவம். சம்பந்தப்பட்ட பெண் தனது கணவருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் போலீஸார் அப்பெண்ணை இழுத்துச் சென்று விட்டனர்.
ஹோட்டலுக்கு வரும் பெண்கள் அனைவரும் விபச்சாரம் செய்யத்தான் வருவார்களா?. போலீஸாரின் செயல் கண்டனத்துக்குரியது என்றார்.
பஹ்ரைன் போலீஸாரின் இந்த செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications