மணல் குவாரி ஏலம்-முடிவைக் கைவிட்டது அரசு

கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட இந்த முறையே நீடித்தது.
இந் நிலையில் மணல் குவாரிகளை டென்டர்கள் மற்றும் ஏலம் மூலம் தனியாருக்கு விட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்தது.
இக்கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தை ஏற்கனவே அறிவித்தபடி அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்தன.
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ஏலம் மற்றும் டென்டர் முறைக்கு மாறினால் பல்வேறு முறைகேடுகள் ஏற்படும் என்று தெரிவித்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், மணல் விற்பனை தொடர்பாக புதிய நெறிமுறைகளை, விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று கோரினார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் மணல் குவாரி முறையில் தற்போது உள்ள நடைமுறையையே தொடர்ந்து கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மணல் விற்பனையை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும். மணல் குவாரிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.
மேலும், மணல் விற்பனையில் நிலவும் முறைகேடுகளைக் களைவதற்காக பொதுப்பணித்துறை, நிதித்துறை, தொழில்துறை செயலாளர்களைக் கொண்ட குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
வெளி மாநிலங்களுக்கு மணல் விற்பனை செய்வதை நிறுத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications