கல்விவளர்ச்சிக்கு மத்தியஅரசு ரூ.34,000 கோடி ஒதுக்கீடு-வாசன் தகவல்
நாமக்கல்: நாட்டின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.34,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், தோளூர்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது:
நாட்டில் கல்வித்தரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.
1967ம் ஆண்டு நிலவரப்படி கல்வி அறிவு பெற்றவர்கள் மொத்தம் 18 சதவீதம் மட்டுமே. ஆனால் வரும் 2011ம் ஆண்டுக்குள் இந்தியா முழுகல்வி அறிவு பெற்ற நாடாகிவிடும். 100 சதவீத மக்களும் கல்வி அறிவு பெற்று விடுவார்கள்.
நாடுமுழுவதும் 2,379 பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 242 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. உலகில் பொறியியல் படிக்கும் மாணவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
நடப்பு நிதி ஆண்டில் கல்விக்காக மத்திய அரசு ரூ 34,000 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ 13 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்துக்கு ரூ 8,000 கோடி.
கடந்த நிதியாண்டில் 6 மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. நடப்பு நிதியாண்டில் மேலும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications