வீட்டு கேஸ் இணைப்பு டெபாசிட் கடும் உயர்வு
டெல்லி: சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான டெபாசிட் தொகையில் திடீரென்று ரூ. 400 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெறுவோர் இனி, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 1,250 செலுத்த வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை கேஸ் இணைப்பு பெறுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.900 டெபாசிட்டாக செலுத்தினர். பின்னர் இந்தத் தொகை ரூ. 850 ஆகக் குறைக்கப்பட்டது.
தற்போது, சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான டிபாசிட் தொகை ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக கேஸ் இணைப்பு பெறுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.1,250 செலுத்த வேண்டும். இரண்டு சிலிண்டர்களுக்கு ரூ. 2,500 செலுத்த வேண்டும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கான டெபாசிட் தொகையும் ரூ.500ல் இருந்து ரூ. 900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்.பி.ஜி., சிலிண்டர் உற்பத்திக்கு ஆகும் செலவோடு ஒப்பிடுகையில் இந்த டெபாசிட் தொகை, குறைவே. ஸ்டீல் விலை உயர்வால், சிலிண்டர்களால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்றார்.
கேஸ் சிலிண்டர் டெபாசிட் உயர்த்தப்பட்டது மட்டுமல்லாமல், சிலிண்டருக்கு பொருத்தப்படும் ரெகுலேட்டர்களின் விலையும் ரூ.100லிருந்து ரூ. 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications