'ஆந்திர ஜோதி' நாளிதழ் மீது தாக்குதல்!
ஹைதராபாத்: மாடிகா இட ஒதுக்கீடு போராட்ட அமைப்பினர் ஆந்திர ஜோதி தெலுங்கு நாளிதழ் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர்.
ஆந்திராவைச் சேர்ந்த மாடிகா சமுதாயத்தினர் தனி இட ஒதுக்கீடு கோரி போராடி வருகின்றனர். இதற்காக மாடிகா இட ஒதுக்கீடு போராட்டக் குழுவையும் அவர்கள் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த அமைப்பு குறித்து பிரபல ஆந்திரஜோதி நாளிதழில் ஒரு செய்தி வெளியாகிருந்தது. இதற்கு மாடிகா போராட்டக் குழு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.
இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்தை நேற்று மாடிகா போராட்டக் குழுவினர் தாக்கி சேதப்படுத்தினர். கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தீ வைத்தனர்.
இந்த நிலையில் ஹைதராபாத், தில்குஷ் நகரில் உள்ள இந்த நாளிதழின் மண்டல அலுவலகம் இன்று தாக்கப்பட்டது.
அலுவலகத்திற்கு 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், போன்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.












Click it and Unblock the Notifications