ஜோசியத்தை நம்பியதால் தோற்றது காங்-வீரமணி
சென்னை: ஜோதிடர் கூறியதை நம்பியதால் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2004ம் ஆண்டில் பெற்றதை விட கூடுதலாக 15 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ள போதிலும், பாஜகவை விட அதிக இடங்களைப் பெறத் தவறி விட்டது. இதனால் கர்நாடக ஆட்சிப் பீடத்தில் காவிக் கறை ஏற வழி வகுத்து விட்டது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தேவெ கெளடா குடும்பத்தினருக்கு எதிராக பெண்களை நிறுத்தினால் வெற்றி பெற்று விடலாம் என ஜோதிடர்கள் கணித்ததை காங்கிரஸ் கட்சி ஏற்றது.
அதன்படியே கெளடாவின் மகன் குமாரசாமிக்கு எதிராக ராமகிருஷ்ண ஹெக்டேவின் மகளையும், இன்னொரு மகன் ரேவண்ணாவுக்கு எதிராக இன்னொரு பெண் வேட்பாளரையும் நிறுத்தினர். ஆனால் காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் எளிதில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்.
அரசியல் கொள்கைகளை செயல்படுத்தவும், மக்களிடம் செல்வாக்குப் பெற்ற தொண்டால் சிறந்தவர்களையும் தேர்வு செய்வதை விடுத்து, ஆல மரத்தடி ஜோதிடர்களை காங்கிரஸ் நம்பியதே அது மீண்டும் அரியணை ஏறாததற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் வீரமணி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications