கேரளாவில் நல்ல மழை-ஓரிரு நாட்களில் பருவ மழை
திருவனந்தபுரம்: தென் மேற்குப் பருவ மழையின் அறிகுறி கேரளாவில் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. ஓரிரு நாட்களில் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய பருவ மழைகளில் ஒன்று தென் மேற்குப் பருவ மழை. ஜூன் 1ம் தேதி தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே மே 28ம் தேதியே தொடங்கும் என ஏற்னவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இது பருவ மழையின் அறிகுறியே என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை முழு வீச்சில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும், ஓரிரு நாட்களில் பருவ மழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவிலும் லேசான மழை பெய்துள்ளது.
புனலூரில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழையும், ஆலப்புழாவில் 20 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரங்களில் கேரளா மற்றும் லட்சத்தீவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழையால் கேரளாவையொட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications