ஊனமுற்றோருக்கு சேவைப் பிரிவை தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சென்னை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உடல் ஊனமுற்றோர் சேவைப் பிரிவு சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இது செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊனமுற்றோரின் விமான பயணம் இலகுவாகவும், அவர்கள் எந்த சிரமமும் இன்றி பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேவைப் பிரிவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக சென்னையைச் சேர்ந்த வித்யா சாகர் (முன்பு இந்திய ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரிவைத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொது மேலாளர் பூ சாய் வூ கூறுகையில், இந்தத் திட்டத்தின் கீழ், விமான நிலைய நுழைவாயிலில் இருந்து விமானத்தில் அமரும் வரை, ஊனமுற்ற பயணிகளுக்கு உதவ தனியாக ஆட்கள் நியமிக்கப்படுவர்.
மேலும், விமானத்தில் ஏற காத்திருப்போர் அமரும் பகுதியில், ஊனமுற்ற பயணிகளுக்கு என தனி வசதிகள் செய்யப்படும். மேலும் ஊனமுற்ற பயணிகளின் உடமைகளை விரைவில் பெறவும முன்னுரிமை தரப்படும்.
இதுதவிர விரைவில், ஊனமுற்றோருக்கு ஆதரவு காட்ட வேண்டும், உதவ வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விசேஷ விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றார் வூ.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications