காரியாபட்டி: அதிமுக கொடிக் கம்பத்தில் செருப்பு மாலை
அருப்புகோட்டை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அதிமுக கொடிக்க ம்பத்துக்கு மர்ம நபர்கள் செருப்பு தோரணம் அணிவித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரியாப்பட்டி அருகில் உள்ளது கல்குறிஞ்சி கிராமம். இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகில் அதிமுக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.
இந்த கொடிக் கம்பத்துக்கு மர்ம் ஆசாமிகள் சிலர் நேற்று செருப்பு மாலை அணிவித்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதைக் கண்டு அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜராஜன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அருப்புக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிமுக நிர்வாகிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கொடி கம்பத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யுமாறு அதிமுகவினர் கோரினர்.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்பு மறியலை கைவிட்டு அதிமுவினர் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications