கருணாநிதியுடன் அர்ஜூன் சிங் சந்திப்பு
சென்னை: மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முதல்வர் கருணாநிதியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிற்பகல் 1 மணிக்கு சென்னைக்கு வந்த அர்ஜூன் சிங், ஆளுநர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலையில், கோபாலபுரம் இல்லம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மரியாைத நிமித்தமாகவே முதல்வர் கருணாநிதியை சந்தித்தேன். தேசியப் பிரச்சினைகள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதித்தோம்.
இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற அம்சம் தேவையில்லை, அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார். அதே கருத்தைத்தான் மத்திய அரசும் கொண்டுள்ளது என்று அவரிடம் தெரிவித்தேன்.
விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார் அர்ஜூன் சிங்.
அர்ஜூன் சிங்கின் வருகை மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் கூட, அவர் ஒரு முக்கிய செய்தியுடன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருணாநிதியுடன், அர்ஜூன் சிங் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுரையின் பேரில்தான் அர்ஜூன் சிங் வந்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான மன நிலைக்கு காங்கிரஸ் கட்சி வந்துள்ளது. இதற்குக் காரணம், சமீப காலமாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
கர்நாடகத்தில் அதற்குக் கிடைத்துள்ள தோல்வி, கட்சி மேலிடத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே ஆட்சிக்காலம் முடியும் வரையில் காத்திருக்காமல் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் எப்படி இருக்கும் என்று காங்கிரஸ் யோசிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தலை எப்போது நடத்தினால் நலமாக இருக்கும் என்பது குறித்து கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக மூத்த தலைவரான கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தும் பொருட்டே அர்ஜூன் சிங் சென்னைக்கு வந்ததாக தெரிகிறது.
சமீபத்தில் சென்னை வந்து முதல்வரைச் சந்தித்த நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூட நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முதல்வருடன் முக்கிய விவாதம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications