கோவில் குட்டி யானை சாவு- நிர்வாகம் மீது புகார்
குற்றாலம்: குற்றாலத்தை அடுத்துள்ள இலஞ்சி குமாரர் கோவிலின் குட்டி யானை மர்மமாக இறந்தது.
குற்றாலத்தை அடுத்த இலஞ்சி குமாரர் கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு கடம்பூர் இளைய ஜாமின்தார் மாணிக்கராஜா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ரூ.40 லட்சம் செலவில் இரண்டு குட்டி யானைகளை வழங்கினர்.
இந்த யானைகளுக்கு வள்ளி, தெய்வானை என பெயர் சூட்டப்பட்டது.. யானைகளை பாரமரிப்பதற்காக ரூ. 13 லட்சத்திற்கு வங்கியில் டெபசிட் செய்திருந்தனர். இரண்டு யானைகளும் பக்தர்களையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில் இன்று காலை தெய்வானை திடீரென மயங்கி கீழே விழுந்து சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இதுகுறித்து கோயில் தரப்பில் கூறுகையில், நேற்றிரவு வரை இரண்டு யானைகளும் வழக்கம்போல் உணவருந்தின. இன்று காலை குளிப்பதற்காக பாகன் அழைத்து சென்றபோது வள்ளி மட்டும் உடன் சென்றது. தெய்வானை வர மறுத்துவிட்டது.
இதனால் தெய்வானையை பாகன் கட்டி போட்டார். சிறிது நேரத்தில் அது கீழே விழுந்து இறந்துவிட்டது. இதுகுறித்து கோயில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்லத்தை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரி தலைமையில் பிரேத பரிசோதனை நடந்த பிறகு யானை அடக்கம் செய்யப்படும் என்று கூறினார். இதற்கிடையே குட்டி யானைகளில் ஒன்று இறந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோயில் நிர்வாகம் மற்றும் பாகன்களின் பராமரிப்பு குறைவினாலும், உணவு பற்றாக்குறையினாலுமே யானை இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications