கலர் டிவி வாங்கியதில் ஊழல்: உயர் அதிகாரி டிஸ்மிஸ்
சென்னை: கலர் டிவி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறை அதிகாரி ஜெயபாலகிருஷ்ணன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மண்டலப் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராகப் பணிபுரிந்து வந்தவர் பி.ஜெயபாலகிருஷ்ணன். அவர் கோவை மாவட்ட கலெக்டரின் பஞ்சாயத்துப் பிரிவு நேர்முக உதவியாளராக 1994-96-ம் ஆண்டு பணிபுரிந்துள்ளார்.
அப்போது கலர் டி.வி.க்கள் வாங்க கூடுதல் எண்ணிக்கைக்கான ஆணை பிறப்பிப்பதற்காக லஞ்சம் கேட்டு வாங்கிய விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் சஸ்பெண்ட் நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோட்டை சேர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் விநியோகஸ்தர் ஒருவர் பொள்ளாச்சி கோட்டத்தின், கோட்ட தொழில்நுட்ப உதவியாளராக இருந்த கோபிகிருஷ்ணா என்பவரின் மூலம் நடந்த பரிவர்த்தனையில் ஜெயபாலகிருஷ்ணனுக்கு லஞ்சத் தொகையை அவருடைய சிங்காநல்லூர் வீட்டில் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
ஜெயபாலகிருஷ்ணன் மீது பிறப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நடந்த தீவிர விசாரணையில் அவை உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அவரைப் பணியிலிருந்து நீக்கம் செய்ய தன்னுடைய ஒப்புதலை வழங்கியது.
இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பி.ஜெயபாலகிருஷ்ணனை 29.5.2008 அன்று உடனடியாகப் பணியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்து ஆணை பிறப்பித்தது.
இணை இயக்குநர் நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகப் பணி நீக்கம் நிகழ்ந்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை ஊழல் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications