மும்பையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு
மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான வாஷியில், ஐபிஎல் டுவென்டி 20 இறுதிப் போட்டி நடைபெறவுள்ள ஸ்டேடியம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.
மும்பை வாஷி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவி மும்பையில் விஷ்ணுதாஸ் பவே தியேட்டர் உள்ளது. இங்கு நேற்று இரவு நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இடைவெளையின்போது, தியேட்டர் வளாகத்தில் ஒரு பை கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்தப் பையை மீட்டனர். அதை சோதித்து பார்த்தபோது அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அந்த வெடிகுண்டை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று அது செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த இடத்திற்கு அருகில்தான் வாஷி கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த நிலையில் வெடிகுண்டு சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு சிக்கியதால், போட்டி ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அது நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications