நாஞ்சில் குமரன் ஓய்வு-சென்னை போலீஸ் கமிஷ்னரானார் சேகர்

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ஏற்கனவே புதிய ஆணையராக சேகர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று ஆணையராக சேகர் பதவியேற்றார். அவரிடம் தனது பொறுப்புகளை நாஞ்சில் குமரன் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சேகர் சந்தித்தார். அவர்களிடம் சேகர் பேசுகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை என்னிடம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுப்பேன். சென்னையில் ஏற்கனவே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இனி வருங் காலங்களிலும் சென்னையில் எந்த இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மேலும் பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற குற்றங்களை தடுக்கவும் சமூக விரோதிகளின் நடவடிக் கைகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி எடுக்கப்படும்.
மேலும் ரவுடிகளை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிறையில் இருந்து வெளிவரும் ரவுடிகள், குற்றவாளிகள் ஆகியோர் போலீசாரால் தொடர்ந்து கண்காணிக் கப்படுகிறார்கள். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பார்கள்.
சென்னையில் மோசடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 10 ரூபாய் பொருளை 2 ரூபாய்க்கு கொடுப்பேன் என்று யாராவது சொன் னால் அதை எப்படி கொடுக்கிறார்கள், அதன் பின்னணி என்ன என்பதை பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இருப்பினும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக் கப்படும்.
தற்போது இருக்கும் போலீசாரை வைத்தே திறம்பட பணிகளை செய்வோம். இப்பற்றாக்குறையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறை களை எந்த நேரத்திலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றார்.
புதிய ஆணையராக பதவியேற்றுள்ள சேகர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1981-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனர், இணை கமிஷனர் மற்றும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆகிய பதவி களை வகித்துள்ளார்.
மேலும் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார். 1999- 2007ம் ஆண்டுகளில் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications