அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகும்
சென்னை: கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையி்ல் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தமிழகத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வரும் 3 நாட்களில் பருவ மழை தீவிரமடையும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்,
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நேற்று அதிகபட்சமாக குழித்துறையில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. தக்கலையி 50 மி.மீ, நாகர்கோவில், கரூர், பரமத்தி, பேரையூர், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ,
திருச்சியில் 20 மி.மீ, திருவண்ணாமலை, கோத்தகிரி, சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 10 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம், திருமுல்லைவாயில், ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் மிக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் அந்தப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications