நாடெங்கும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு: ஜெ
சென்னை: நாடெங்கிலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 17 அளவுக்கு உயர்த்தப்படும், டீசல் விலை ரூ. 5 உயர்த்தப்படும், ரேஷன் முறையில் பெட்ரோலியப் பொருட்கள் வினியோகம்; சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படும், எண்ணெய் நிறுவனங்களை இழப்பில் இருந்து காப்பாற்ற வருமான வரி மற்றும் கம்பெனி வரி மீது கூடுதல் தீர்வை என பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த இருக்கிறது என்று பரப்பப்படும் செய்திகளாலும், கடந்த 31ம் தேதி நள்ளிரவு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற செய்தி பரப்பி விடப்பட்டதாலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
சில பங்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை கட்டாயம் உயர்த்தப்படும் என்ற செய்திகள் வெளி வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்பவர்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பெட்ரோலியப் பொருட்களை பதுக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை விசாரித்ததில், கடந்த ஒரு வார காலமாகவே அவர்கள் கேட்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க மறுக்கின்றன என்றும், எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்,
மணலி சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கேட்கும் அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலை விநியோகம் செய்தால் மட்டுமே தட்டுப்பாட்டைப் போக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் நிர்வாகத் திறமை இன்மையாலும், ஆளும் கூட்டணிக்குள் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாலும், அறிவிக்கப்படாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வையும் தாண்டி தற்போது நாடெங்கிலும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சொல்லி தனியார் வாடகை வாகனங்களுக்கான கட்டணங்களும் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
பஞ்சாப், குஜராத், உத்தராஞ்சல், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வி கண்டும் தன் நிலையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மாற்றிக் கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
எனவே, பொது மக்களின் நலன் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி, அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் வழக்கம் போல் பெட்ரோல், டீசல் உள்பட அனைத்துப் பெட்ரோலியப் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதாக மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்திருந்தால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications