வங்கி வருகைப் பதிவேடுகளில் இந்தி ஆதிக்கம்
சென்னை: சென்னையில் உள்ள சில அரசு வங்கிகளில் இந்தி ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் கையெழுத்திடும் வருகைப் பதிவேட்டில் அவர்களின் பெயர்களை இந்தியில்தான் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பணிகள் நடைமுறையில உள்ளன.
இந்த நிலையில் தமிழை ஓரம் கட்டி விட்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில், சில அரசு வங்கிகள் இறங்கியுள்ளனவாம். குறிப்பாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் இந்தி அதி வேகமாக புகத் தொடங்கியுள்ளது.
இங்கு, ஊழியர்கள் தினசரி கையெழுத்திடும் வருகைப் பதிவேட்டில் இந்தியில்தான் ஊழியர்களின் பெயர்களை எழுத வேண்டும் என உத்தரவு வந்துள்ளதாம். இதனால் வருகைப்பதிவேட்டில் இந்தியில் பெயர்களை எழுத ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் சில ஊழியர்களுக்கு இந்தி தெரியாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வங்கிகளில் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கும் இந்தியை கட்டுப்படுத்தாவிட்டால், அனைத்து நடைமுறைகளையும் இந்திக்குக் கொண்டு போய் விடுவார்கள் என்று ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications