'நான் அப்பாவி' என்கிறார் 'குறும்பு' ஜோசப்!
மலையாள டிவி நடிகையும், முன்னாள் செய்தி வாசிப்பாளருமான லட்சுமி கோபகுமார் சென்னையில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் பயணித்தார்.
அப்போது அவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அப்போதைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப், லட்சுமியின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி குறும்பு செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கேரள அரசும் இதுகுறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் ஜோசப் பதவி விலகினார்.
இந்த நிலையில் இந்த வழக்கில், ஆலந்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் 27 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிக்கை நகலை நேரில் வந்து பெற்றுக் கொள்ளும்படி ஜோசப்புக்கு ஆலந்தூர் கோர்ட் உத்தரவிட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜோசப் ஆஜரானார்.
அப்போது நீதிபதி ராமநாதனிடம் அவர் கூறுகையில், நான் அப்பாவி. என் மீது அபாண்டமான புகாரை சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன் என்றார்.
பின்னர் ஜோசப்பின் வக்கீல்கள், ஜோசப் முக்கிய அரசியல் தலைவராக இருப்பதால் ஒவ்வொரு முறையும் நேரில் வர இயலாது. எனவே அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். பின்னர் ஜூலை 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி













Click it and Unblock the Notifications