அஜ்மானில் கட்டடம் இடிந்து 6 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: அஜ்மானில் கட்டப்பட்டு வரும் ஹோட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்தில் 6 இந்தியர்கள் பலியாயினர். இவர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
நேற்று 7 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியி்ல் ஈடுபட்டிருந்தபோது கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் கான்க்ரீட் இடிபாடுகளில் சிக்கி அந்த இடத்திலேயே பலியாயினர்.
இவர்கள் அனைவருமே 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களாவர். சிட்கோ என்ற நிறுவனத்தின் சார்பில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக சிட்கோ நிறுவன அதிகாரிகள், கட்டட பொறியாளர்கள், நிர்வாகிகளிடம் அஜ்மான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தொழிலாளர்கள் பலியானதற்கு அஜ்மான் மன்னர் ஷேக் ஹூமைத் பின் ரஷீத் அல் நுயய்மி இரங்கலும் அனுதாபமும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications