ராமேஸ்வரம் மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை: தூதர்
சென்னை: ராமேஸ்வரம் மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் அம்சா கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் சந்தியாகு என்கிற மீனவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் இலங்கை கடற்படைக்குத் தொடர்பு இல்லை என்று இலங்கை துணைத் தூதர் அம்சா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டினால் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி எமது கவனத்தை ஈர்த்தது.
மேற்கண்ட செய்தி இலங்கை கடற்படை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தினர். இதில், இலங்கை கடற்படைக்கும் மேற்கண்ட சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் பலமுறை நடுக்கடலில் சிக்கித்தத்தளித்தபோது இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு தங்களுக்கு உதவிகளைச் செய்துள்ளது என தமிழக மீனவர்கள் பலசந்தர்ப்பங்களில் நன்றியோடு ஒப்புக்கொண்டுள்ளதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எனினும் சில தீய சக்திகள் சுயநலத்துக்காக தமிழக மீனவர்களிடையே இலங்கை கடற்படைக்கு இருக்கும் நற்பெயரை குலைக்க முயற்சி நடந்திருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.
இருப்பினும் இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் மீனவர்கள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு கையாளும் தனது கொள்கையை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது என்று கூறியுள்ளார் அம்சா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications