தமிழகத்தில் டீசல் மீதான வி்ற்பனை வரி 2% குறைப்பு

மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது. டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்கள் உயர்ந்து, மற்ற விலைவாசிகளும் உயரும் என்பதால் அதன் மீதான விற்பனை வரியை மட்டும் தமிழக அரசு இன்று குறைத்துள்ளது.
இது குறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கின் கோரிக்கையை ஏற்றும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியபோதும் அதன் மீதான விற்பனை வரியை 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாக மாநில அரசு குறைத்தது.
பின்னர் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தபோதும் கூட வரியை தமிழக அரசு உயர்த்தவில்லை. இதனால் ஆண்டுதோறும் ரூ. 200 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது. இப்போது வரி விகிதம் மேலும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டு்க்கு ரூ. 260 கோடி இழப்பு ஏற்படும்.
அப்போது அப்படி பேசிய ஜெயலலிதா:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களை உயர்த்தியது. அப்போது மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, வரியைக் குறைக்கச் சொல்லி தமிழக அரசின் வருமானத்தை கெடுக்கப் பார்க்கிறார் பாலசுப்பிரமணியம். இதன் மூலம் மாநில அரசை பொருளாதார சிக்கலில் மாட்டி விடப் பார்க்கிறார் என்று பதில் சொன்னார்.
மேலும் இந்த யோசனையைப் போய் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுடன் சொல்லச் சொன்னார்.
இப்போது இப்படி பேசும் ஜெயலலிதா:
இதே ஜெயலலிதா தான் இப்போது மாநில அரசு விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவரது ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல், வரியை முடிந்தவரைக்கும் அரசு குறைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications