வெட்டி செலவு-அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வையடுத்து மத்தியஅமைச்சர்கள் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பி.ஆர். தாஸ்முன்ஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி தேவையும் அதிகரித்து வருகிறது.
எனவே அதிக அளவிலான நிதிச் சுமை மத்திய அரசுக்கு ஏற்படுகிறது. எனவே மத்திய அமைச்சர்கள் விமான பயண செலவை குறைக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டுப் பயணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
பெட்ரோலிய விலை உயர்வுகுறித்து மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். எண்ணெய் இறக்குமதியால் ஏற்பட்டுள்ள சில நிதிச்சுமையை ஏற்குமாறு மக்களிடம் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இது அவசியம் என்றும் அவர்களிடம் கூறியுள்ளோம்.
நிர்வாகத்தில் உள்ள நாம் அனைவரும் அனைத்து வீண் செலவுகளையும் தவிர்த்து விட வேண்டும். இந்தக் கட்டுப்பாட்ைட உடனடியாக செயல்படுத்த வேண்டும். அமைச்சர்கள் மட்டுமின்றி மூத்த அதிகாரிகளுக்கும் இது பொருந்தும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவினை அனைத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார் முன்ஷி.
டி.ஆர்.பாலுவின் பயணம் ரத்து:
பிரதமரின் கடிதத்தை ஏற்று உடனடியாக தனது வெளிநாட்டுப் பயணத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு ரத்து செய்துள்ளார்.
வருகிற 9ம் தேதி அவர் பின்லாந்து செல்லவிருந்தார். அங்கு பின்லாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் அவர்திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தனது பின்லாந்து பயணத்தை பாலு உடனடியாக ரத்து செய்து விட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
தியோரா பயணமும் ரத்து:
அதே போல முரளி தியோராவும் தான் மேற்கொள்ள இருந்த வெளிநாட்டு்ப் பயணங்களை ரத்து செய்துவிட்டார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications