டீசல் விலை உயர்வு: சரக்கு கட்டணம் குறையும்-லாலு அதிரடி

அதே நேரத்தில் டீசல் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை சரி கட்ட சரக்குப் போக்குவரத்தை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக ரயில் கட்டணம் உயரலாம் என ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால், இதை லாலு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
ரயில்வே துறை ஆண்டுதோறும் 227 கோடி லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது. தற்போது டீசல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருப்பதால் ஆண்டுக்கு ரூ.681 கோடி கூடுதல் செலவாகும்.
ஆனால் இந்த விலை உயர்வின் பாதிப்பை ரயில் பயணிகள் மீதோ அல்லது சரக்கு போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்கள் மீதோ சுமத்த ரயில்வே துறை விரும்பவில்லை. சரக்கு போக்குவரத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும், திறமையான நிர்வாகம் மூலமும் இந்த செலவை சரிக்கட்டுவோம்.
சரக்கு கட்டணம் குறைப்பு:
உணவு தானியங்கள், சிமெண்ட், உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது சரக்கு கட்டணத்தில் 30 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது. இதை 50 சதவீதம் வரை அதிகரித்து தள்ளுபடி வழங்குமாறு ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிற சரக்குகளின் போக்குவரத்தை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தை பெருக்கும் வகையில் சரக்கு கட்டணத்தை மேலும் குறைக்க முடியுமா என்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பல நிலைகளில் கட்டணம் குறைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் லாலு.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications