கனரக வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு நாள் கட்டாய பயிற்சி
சென்னை: கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்தை புதுப்பிக்கும் (licence renewal) முன் ஒரு நாள் கட்டாய சிறப்பு பயிற்சி பெற வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பயிற்சி கட்டாயமாக்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் நாராயணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் விபத்து எண்ணிக்கையினை குறைக்கும் பொருட்டு, கனரக வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியளிப்பது அவசியம் என அரசு கருதுகிறது.
இதனால் கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்தை (லைசென்ஸ்) புதுப்பிக்கும்போது ஒருநாள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியை உரிமம் புதுப்பிப்பதற்கான தேதிக்கு முந்தைய 6 மாத காலத்துக்குள் பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சியை தரமணி சாலைப் போக்குவரத்து நிறுவனம் உருவாக்கும்.
போக்குவரத்து ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மட்டுமே மேற்கண்ட பயிற்சியை அளித்து சான்றுகளை வழங்கும்.
இந்த நடைமுறை வரும் 1.10.2008 முதல் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications