சென்னை அருகே குவியல் குவியலாக தோட்டாக்கள் சிக்கின
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் குவியல் குவியலாக துப்பாக்கித் தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2 மூடை தோட்டாக்கள் வெடித்ததில் 2 பேர்காயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுக் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் பழைய இரும்பு பொருட்களை உருக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலைகள் வெளிநாடுகளிலிருந்து இரும்புக் கழிவுகளை கண்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் இறக்குமதி செய்து அவற்றை உருக்கி இரும்பை பிரித்தெடுக்கின்றன.
இவ்வாறு கண்டெய்னர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட இரும்பு கழிவுகளை சிப்காட் வளாகத்தில் உள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகே போடடு வைத்துள்ளனர்.
இந்த வளாகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை தமிழர்கள் அகதி முகாம் உள்ளது. அந்த முகாமில் உள்ள வாலிபர்கள் பலர் இந்த தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
அகதி முகாமைச் சேர்ந்த வாலிபர்கள், பாழடைந்த கிணற்றில் குதித்து குளிப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை அகதிகள் முகாமைச் சேர்ந்த 7 பேர் கிணற்றுக்கு குளிக்க வந்தனர்.
அதில் யோகேந்திரன் என்ற வாலிபர் சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை ஓரமாக போடடுள்ளார். அப்போது அங்கிருந்த மூடை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், சிரில் என்பவரின் மகன் ஜெய்சன் குரூஸ் (15), தர்மலிங்கம் மகன் நகுலேஸ்வரன் (22) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இருவரும் படுகாயங்களுடன் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடி விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் எஸ்.பி. செந்தாமரை கண்ணன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. நவீன் சந்திரா, பொன்னேரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், சிப்காட் வளாக போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கிணற்றை சுற்றி மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மூட்டைகளை தோண்டி எடுத்து பார்த்ததில், அவற்றில் ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏ.கே. 47, 3.3 ரக பிஸ்டல், ரிவால்வர் ஆகிய துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் அவை. இந்த தோட்டாக்களின் மொத்த எடை 40 கிலோவாகும்.
மொத்தம் 9 மூடை தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்தும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கிணற்றுக்குள்ளும் தோட்டாக்கள் அடங்கிய மூட்டைகள் போடப்பட்டுள்ளனவா என்று கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கிணற்றில் தற்போது 7 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீரை இறைத்து அதில் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த தோட்டாக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புக்கழிவுகளில் சேர்ந்து வந்ததா, இதை தெரிந்ததும் அவை பதுக்கி வைக்கப்பட்டனவா என்று தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக டிஐஜி மாசானமுத்து தெரிவித்துள்ளார்.
அருகில் அகதிகள் முகாம் உள்ளதால், இந்த தோட்டா பதுக்களில் அகதிகள் யாருக்கேனும், தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு கடத்த இவற்றை பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் நக்சலைட்டுகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது. முகாமில் உள்ள 3670 பேரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அருகே குவியல் குவியலாக துப்பாக்கித் தோட்டாக்கள் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications