திருப்பதி கோவிலில் செல்போன் திருட்டு-ஊழியர்களிடம் விசாரணை!
திருப்பதி: திருப்பதியில், சென்னையைச் சேர்ந்த பக்தர்களிடமிருந்து 7 செல்போன்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பதியில் பக்தர்கள் பல்வேறு கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அத்தகைய பஸ் ஒன்றில் 60 பக்தர்கள் ஏறி, திருச்சானூருக்கு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்வதற்காக சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.
பஸ் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்றதும் பஸ் டிரைவர் சந்திரய்யா, கைடு ஜெயச்சந்திரன் ஆகியோர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. எங்களிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள், தரிசனம் முடிந்து திரும்பியதும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
இதையடுத்து பக்தர்களும் தங்கள் வசம் இருந்த 30 செல்போன்களை அவர்களிடம் கொடுத்தனர். பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பி வந்து கேட்டபோது, இரு ஊழியர்களும் செல்போன்களைப் போட்டு வைத்திருந்த பையில் 23 செல்போன்கள் மட்டுமே இருந்தன. 7 செல்போன்களைக் காணவில்லை.
அனைத்தும் விலை உயர்ந்த செல்போன்களாகும். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம்.
அதுபற்றி விசாரித்தபோது, டிரைவரும், கைடும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.
இதையடுத்து பக்தர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications