ரேசன் கடைகளில் மானிய விலையில் சமையல் எண்ணெய்
டெல்லி: அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் சமையல் எண்ணெய்யை ரேஷன் கடை மூலம் மானிய விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உள்பட 3 மாநிலங்களி்ல் இந்த மாதத்திலிருந்தே இத் திட்டம் அமலுக்கு வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன் அடையும் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படும்.
தற்போது ரேஷன் கடையில் பாமாயில் ஒரு லிட்டர் ரூ.40க்கு வழங்கப்படுகிறது. இனி இது ரூ. 25க்கு வழங்கப்படும். லிட்டருக்கு ரூ.15யை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
முதல் கட்டமாக தமிழ்நாடு, இமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த மாதத்தில் இருந்து இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
இதற்காக 10 லட்சம் டன் பாமாயிலை மத்திய அரசு இறக்குமதி செய்யவுள்ளது.
வெளிச்சந்தையில் சமையல் எண்ணெய் லிட்டர் ரூ. 80 வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
