பதிய சட்டசபை-நாளை கருணாநிதி அடிக்கல்
சென்னை கடற்கரை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது தமிழக சட்டமன்றமும், தலைமைச் செயலகமும், அதையொட்டியுள்ள அரசு அலுவலக கட்டிடமும் அமைந்துள்ளன இடம் ராணுவத்துக்கு சொந்தமானதாகும்.
இதற்கு வாடகை செலுத்தி வருகிறது தமிழக அரசு. சட்ட சபையையோ, தலைமைச் செயலகத்தையோ விரிவாக்கம் செய்ய அங்கு இடமில்லை.
இதனால் கடும் இட நெருக்கடியில் தான் சட்டமன்றம், தலைமைச் செயலகம், அரசு அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
இதையடுத்து விரிவான, நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டசபை, தலைமைச் செயலகம் கட்ட முடிவானது. ஆனால், இடத் தேர்வில் சிக்கல் எழுந்தது.
மீனவர் குப்பங்களைத் தூக்கிவிட்டு கடலோரத்தில் சட்டமன்றத்தை அமைக்க முயன்றார் ஆட்சியில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மீனவர்களின் கடும் எதி்ர்ப்பையும் பொருட்படுத்தாமல் அதை செயல்படுத்த முயன்றபோது மேதா பட்கரே நேரில் வந்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து ஜெயலலிதா பின் வாங்கினார்.
இதையடுத்து வரலாற்று சிறப்பு வாய்ந்த ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு சட்டமன்றம் கட்ட முயன்றார். இதை எதிர்த்த ஆசிரியையகள், மாணவிகளை போலீஸை விட்டு தாக்கினார். பலர் கைதாகினர்.
மாநிலம் முழுவதும் இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையிலே தேர்தல் வந்துவிட்டது. அதில் ஜெயலலிதா மண்ணைக் கவ்வியதையடுத்து ராணி மேரிக் கல்லூரி தப்பியது.
இதையடுத்து திமுக ஆட்சியில் இடத் தேர்வு மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்தது. அடுத்தவர் இடத்தில் கை வைத்து சிக்கலில் மாட்டாமல், அரசுக்கு சொந்தமாக உள்ள அரசினர் தோட்டத்தி்லேயே அதைக் கட்ட முடிவானது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த பாழடைந்த பங்களாவில் செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் பழைய எம்எல்ஏ ஹாஸ்டலின் ஒரு பகுதி, அரசின் பிரஸ் உள்பட வேறு சில பழைய கட்டடங்களும் இடிக்கப்பட்டன.
இப்போது அங்கு ரூ.200 கோடி செலவில் 1.6 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் கட்டப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகத்தைக் கட்ட உலக அளவிலான டெண்டர் கோரப்பட்டு ஜெர்மனியை சேர்ந்த ஜி.எம்.பி. கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎம்பியின் முன்னணி டிசைனர்களான கேத்ரீனா புரோசே, கிரிஸ்டென் ஓட்டே, ஹெல்ஜே லெசூயிஸ், ஜூலியான் ஆகியோர் இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த நிறுவனம் 2010ம் ஆண்டு இந்த கட்டிடத்தை கட்டி முடிக்கும்.
நவீனமும் திராவிட கட்டிடக் கலையும் இணைந்ததாக இந்த கட்டடம் வடிமைக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!













Click it and Unblock the Notifications